கோபத்துடன் சென்ற மனைவியை சமாதானப்படுத்த 3 நாள் விடுமுறை தேவை - வைரலான அரசு ஊழியர் கடிதம்
- கோபத்துடன் சென்ற மனைவியை அழைத்துவர 3 நாள் விடுமுறை கேட்டு அரசு ஊழியர் கடிதம் எழுதியுள்ளார்.
- அரசு ஊழியரின் இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லக்னோ:
அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் விடுமுறை எடுப்பவர்கள் பல்வேறு காரணங்களை கூறி விடுப்பு எடுப்பது வழக்கம். அதில் சிலர் தெரிவிக்கும் காரணங்கள் இணைய தளங்களில் வைரலாகும்.
இந்நிலையில், உ.பி.யில் விடுமுறை கேட்டு எழுதிய அரசு ஊழியரின் கடிதம் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது அதிகாரிக்கு விடுப்பு விண்ணப்பம் அளித்துள்ளார்.
அந்த விண்ணப்பத்தில், தனது 3 குழந்தைகளுடன் மனைவி, அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் எனக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கிராமத்தில் இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துவர விடுப்பு தேவைப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை விடுப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியரின் இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.