இந்தியா

கர்நாடகாவில் மிளகாய் பணம் 1.93 கோடி ஏமாற்றியதால் 4 விவசாயிகள் தற்கொலை முயற்சி

Published On 2024-07-01 04:17 GMT   |   Update On 2024-07-01 04:17 GMT
  • மிளகாய் சாகுபடி உற்பத்தி செய்து இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்து வந்தனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் சோமசமுத்திர கிராமத்தை சேர்ந்த கோனீரப்பா (வயது 32) மற்றும் குடிஷ்மாவை சேர்ந்த ஹனுமந்தா (32), காம்ப்ளி தாலுகா ஜவுகு கிராமத்தை சேர்ந்த ஆயில் சேகரப்பா (43), ருத்ரேஷ் (53) ஆகியோர் மிளகாய் விவசாயிகள் ஆவார்கள். இவர்கள் தங்களது கிராமத்தில் மிளகாய் சாகுபடி உற்பத்தி செய்து இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இடைத்தரகர் ராம்ரெட்டி என்பவர் இந்த விவசாயிகளிடம் இருந்து ரூ.1.93 கோடிக்கு மிளகாய் வாங்கினார். ஆனால் இந்த பணத்தை அவர்களிடம் இடைத்தரகர் ராம்ரெட்டி கொடுக்கவில்லை. தாங்கள் விளைவித்த மிளகாய்க்கு கிடைக்க வேண்டிய பணத்தை கொடுக்காததால் மனமுடைந்த விவசாயிகள் இடைத்தரகர் ராம்ரெட்டி வீட்டின் முன்பு விவசாயிகள் 4 பேரும் கிருமி நாசினி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

அவர்கள் சிகிச்சைக்காக பெல்லாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News