இந்தியா

அனைத்து நிறுவனங்களிலும் நவம்பர் 1-ந்தேதி கர்நாடகா கொடியேற்ற வேண்டும்: துணை முதல்-மந்திரி உத்தரவு

Published On 2024-10-12 08:39 GMT   |   Update On 2024-10-12 08:39 GMT
  • மாணவர்களிடையே அன்பையும், பாசத்தையும் வளர்க்கும் வகையில் கொண்டாட்டங்களை கட்டாயமாக நடத்த வேண்டும்.
  • சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை போன்று நவம்பர் 1-ந் தேதியும் பள்ளிகள் மற்றம் கல்லூரிகளில் கலச்சார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

பெங்களூரு:

கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நவம்பர் 1-ந் தேதி கர்நாடகாவிற்கு முக்கியமான நாள். அன்றைய தினத்தை மாநிலதினமாக (கர்நாடக ராஜ்யோத்சவா) கொண்டாடுறோம். கன்னட மொழி மற்றும் மாநிலத்தின் பெருமையை வளர்க்கும் வகையில் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்கள், மற்றும் கல்வி மையங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் அன்றைய தினம் கட்டாயமாக கர்நாடகா மாநில கொடியை ஏற்றி வைக்க கர்நாடக வளர்ச்சித்துறை அமைச்சர் என்ற முறையில் உத்தரவிடுகிறேன்.

தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் கன்னட மொழி மீது மாணவர்களிடையே அன்பையும், பாசத்தையும் வளர்க்கும் வகையில் கொண்டாட்டங்களை கட்டாயமாக நடத்த வேண்டும். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை போன்று நவம்பர் 1-ந் தேதியும் பள்ளிகள் மற்றம் கல்லூரிகளில் கலச்சார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

நவம்பர் 1-ந் தேதியன்று கன்னட மொழியை கொண்டாடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்த நாள் மாநிலம் உருவானதை குறிக்கிறது. மேலும் கன்னட மொழி மற்றும் மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News