இந்தியா
null
2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
- கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- கேரளா, லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வருகிற 13-ந் தேதி வரை இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதன் காரணமாக கேரளம் மற்றும் தமிழக கடற்கரையோரங்களில் 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கேரளா, லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.