மக்கள்தான் எனது பலம்- குமாரசாமி பெருமிதம்
- மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி பெங்களூருவில் இன்று ரோடு ஷோ நடத்தினார்.
- வழி நெடுகிலும் பொதுமக்கள் கூட்டமாக திரண்டு, பூக்களை தூவி குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி 8,51,881 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா 567261 வாக்குகள் பெற்று இருந்தார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2,84,620 ஆகும்.
குமாரசாமி இந்த முறை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு துணை நின்றதுடன், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசியலிலும் இணைந்திருக்கிறார். மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.
இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி பெங்களூருவில் இன்று ரோடு ஷோ நடத்தினார். வழி நெடுகிலும் பொதுமக்கள் கூட்டமாக திரண்டு, பூக்களை தூவி குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"இன்று மக்கள் தாமாக முன்வந்து என்னை அன்புடன் வரவேற்றனர். மக்கள்தான் எனது பலம். கர்நாடகாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி நாட்டிற்காகவும் பாடுபடுவேன். கர்நாடக மக்கள் காங்கிரசுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர் என்று கூறினார்.