இந்தியா

உத்தரகாண்ட்: சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த மலைப்பகுதி - பீதியை கிளப்பும் வீடியோ

Published On 2024-07-03 08:28 GMT   |   Update On 2024-07-03 08:28 GMT
  • ஒவ்வொரு வருடம் பருவமழை நேரத்தில் பித்தோராகரில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • நிலச்சரிவு தொடர்பான வீடியோ பார்ப்பவர்களை பீதியில் ஆழ்த்துகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின் போதும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதால், தார்ச்சுலா பகுதி முழுவதும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பித்தோராகரின் தார்சூலாவில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ரோங்டி நாலா அருகே தவாகாட் சாலை முடங்கியது. சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டின் பருவமழை காலத்தில் நிலச்சரிவு சம்பவங்கள் அரங்கேறுவது தொடர்கதையாக இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த ஆண்டு பருவமழைக்கு மாநில அரசின் தயார்நிலை குறித்து பல இணையதளவாசிகள் கேள்விகளை எழுப்பினர்.

இது குறித்து, "ஒவ்வொரு வருடம் பருவமழை நேரத்தில் பித்தோராகரில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான பிரச்சனையாக இருப்பது, குப்பைகளை அகற்றுவது மட்டுமல்ல, பொதுமக்களின் உயிரிழப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

தற்போதைய நிலச்சரிவு தொடர்பான வீடியோ பார்ப்பவர்களை பீதியில் ஆழ்த்துகிறது. மேலும், இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


Tags:    

Similar News