புல்வாமா: வீட்டுக்குள் பதுங்கிய பயங்கரவாதிகள்.. சுற்றி வளைத்த ராணுவம்.. அடுத்து நடந்தது என்ன?
- பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
- துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியை அடுத்த நெஹாமாவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரை பார்த்ததும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே இன்று காலை முதல் துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. ரயிஸ் அகமது மற்றும் ரெயாஸ் அகமது ஆகிய பயங்கரவாதிகள் புல்வாமா மாவடத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
கடும் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து இவர்கள் மறைந்திருந்த வீட்டில் இருந்து தீப்பற்றி எரிவதும், வானில் கரும்புகை எழுவதுமான காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இருதரப்பிலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக மே 7 ஆம் தேதி பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் லஷ்கர் ஆதரவு பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பசித் தார் என்பது தெரியவந்தது.