இந்தியா

காதலும் குற்றமாகும்?.. லவ் ஜிகாத்துக்கு உ.பி- யை தொடர்ந்து அசாமிலும் ஆயுள் தண்டனை விதிக்க திட்டம்

Published On 2024-08-04 14:41 GMT   |   Update On 2024-08-06 00:48 GMT
  • 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
  • லவ் ஜிகாத் குறித்து யார் புகார் அளித்தலும் நடவடிக்கை எடுக்க முடியும்

லவ் ஜிகாத் 

இனம் மதம் மொழி கடந்ததுதான் காதல் என்ற அடிப்படையில் உலகம் இயங்கி வருகிறது. இதில் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு மதத்தைப் பின்பற்றும் மக்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில் காதலுக்கு தடையாக பெற்றோர், குடும்ப அமைப்புகள் இருந்து வந்த காலம் மாறி அரசாங்கமே தடை விதிக்கும் காலம் வந்துவிட்டது என்ற கருத்து நாளுக்குநாள் நடந்து வரும் மாற்றங்களால் உறுதிப்படத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக இந்து- இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொள்வதற்கான சுதந்திரம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஜனநாயக விரும்பிகள் கருதுகின்றனர். இந்து மதப் பெண்களை இஸ்லாமிய மத ஆண்கள் காதலித்து மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொள்வதாகக் குற்றம் சாட்டி தீவிர வலதுசாரி இந்து அமைப்புகள் முன்வைக்கும் பதம் 'லவ் ஜிகாத்'.

 

ஆயுள் தண்டனை 

அரசியல் களத்திலும் சமீக காலங்களாக இந்த பதத்தின் உபயோகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி அதித்தநாத் தலைமையிலான பாஜக அரசு, லவ் ஜிகாத்திற்கு எதிராக 2021 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது.

இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது என்றும் அவ்வாறு திருமணம் செய்தவரை ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

 

தற்போது அந்த சட்டத்தில் திருத்தும் கொண்டுவந்துள்ள உ.பி அரசு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும். அபராத தொகை 50,000 ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. முன்னர் பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று இருந்த நிலையில் தற்போது அதுபேன்ற திருமணங்கள் குறித்து யார் புகார் அளித்தலும் நடவடிக்கை எடுக்க முடியும் சட்டத்தில் திருத்தும் செய்யப்பட்டுள்ளது

அசாம் 

அசாமில் ஆட்சியில்  உள்ள பாஜக அரசு உ.பியை போன்று லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்க உறுதி பூண்டுள்ளது.

இதுதொடர்பாக பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா, தேர்தலின்போதே லவ் ஜிகாத் குறித்து நிறைய பேசினோம், லவ் ஜிகாத் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டதை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அசாம் மாநில அரசு பணிகளில் அசாமில் பிறந்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்ற விதியையும் கொண்டுவருவோம் என்று தெரிவித்தார்.

லவ் ஜிகாத் குறித்த பாஜக ஆளும் மாநில அரசுகளின் இந்த முடிவுகள், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கிறது என்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. 

Tags:    

Similar News