இந்தியா

ராமர் கோவில் இப்படித் தான் உருவாகனும்னு விதி இருக்கு - எல்.கே. அத்வானி

Published On 2024-01-12 16:09 GMT   |   Update On 2024-01-12 16:09 GMT
  • கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
  • எல்.கே. அத்வானி வயது மூப்பு காரணமாக கலந்த கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. 16-ந்தேதியில் இருந்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற இருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முக்கியமானவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால், மற்ற தலைவர்கள் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

96 வயதான பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வயது மூப்பு காரணமாக கலந்த கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் கலந்து கொள்ள இருப்பதாக விஸ்வ இந்து பரிசத் தெரிவித்து இருக்கிறது.

 


இதனிடையே, ராமர் கோவில் திறப்பு விழா குறித்து எல்.கே. அத்வானி கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "ரத யாத்திரை புறப்பட்ட போதே, ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்படும் என்ற விதி இருப்பதை நான் உணர்ந்தேன். யாத்திரை துவங்கிய சில தினங்களிலேயே, நான் வெறும் தேரோட்டி மட்டும் தான் என்பதை அறிந்து கொண்டேன். உண்மையான கருத்து யாத்திரை... ராமர் பிறந்த இடத்திற்கே சென்றதால் ரதம் அனைவரும் வணங்கக்கூடிய ஒன்றாக இருந்தது."

"யாத்திரையின் போது பல்வேறு அனுபவங்கள் என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தின. முகம் தெரியாத நிறைய பேர் கிராமங்களில் இருந்து, என்னை சந்திக்க வந்தார்கள். அவர்களின் முகம் முழுக்க உணர்ச்சி நிரம்பி இருந்தது. அவர்கள் எனக்கு வணக்கம் தெரிவிப்பர். ராமர் கோஷம் எழுப்புவர். அப்போது, மக்கள் ராமர் கோவில் வேண்டும் என்ற கனவுடன் இருந்தனர் என்ற தகவல் தெளிவாக இருந்தது."

"தற்போது பிரதமர் மோடி கோவிலில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய இருக்கிறார், அவர் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் சார்பில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார்," என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News