இந்தியா

விலங்குகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது- முதலைகள் தப்பி ஓடியதால் பரபரப்பு

Published On 2024-10-18 05:51 GMT   |   Update On 2024-10-18 05:51 GMT
  • போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முதலைகளை தேடி வந்தனர்.
  • பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

பீகார் மாநிலம், சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவில் இருந்து பெங்களூர் பன்னர் கட்டா பூங்காவிற்கு புலிகள், 8 முதலைகள் மற்றும் பிற அரிய வகை உயிரினங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டு இருந்தது அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

அப்போது லாரியில் இருந்த 8 முதலைகளில் 2 முதலைகள் லாரியில் இருந்து வெளியேறியது. இதனைக் கண்ட லாரி டிரைவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் போலீஸ் சூப்பிரண்டு ஜானகி சர்மிளா மற்றும் போலீசார் விபத்து நடந்த இடங்களை பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முதலைகளை தேடி வந்தனர். தப்பி ஓடிய முதலைகளால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு லாரியில் இருந்து தப்பிய 2 முதலைகளை போலீசார் மீட்டனர். இதையடுத்து மற்றொரு லாரியை ஏற்பாடு செய்து வனவிலங்குகளை ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News