null
வயநாட்டில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி பிரசாரம்
- ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்
- பிரியங்கா காந்தி முதல்முறையாக கேரளாவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம் ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடர்கிறார்.
வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம், பிரியங்கா காந்தி முதல்முறையாக கேரளாவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.
இந்நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை ஆதரித்து மம்தா பானர்ஜி பிரசாரம் சீதா உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜூன் 20 ஆம் தேதி மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். இதனையடுத்து மம்தா பேனர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராஜினாமா செய்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் மம்தா இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டு கூட்டணி கைகூடாமல் போனது குறிப்பிடத்தக்கது.