இந்தியா
நாய்க்குட்டிக்கு பீர் ஊட்டி ரீல்ஸ் எடுத்த போதை ஆசாமி - வீடியோ வைரல்
- இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது.
- இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிக்கந்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.