இந்தியா

ஐதராபாத்தில் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை

Published On 2024-07-16 04:21 GMT   |   Update On 2024-07-16 04:21 GMT
  • அதிசய குழந்தையைக் கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
  • 5 முதுகெலும்புடன் இணைக்கப்பட்ட வால் வெளியே வந்தது கண்டறியப்பட்டது.

திருப்பதி:

ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பின் பகுதியில் வால் இருந்தது. அதிசய குழந்தையைக் கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

குழந்தை பிறந்த 3 மாதங்களில் 15 சென்டி மீட்டர் அளவுக்கு வால் வளர்ந்தது.

இதனால் குழந்தையின் பெற்றோர் கவலை அடைந்தனர். இதையடுத்து ஐதராபாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷஷாங் பாண்டா குழந்தையை பரிசோதித்தார்.

அப்போது முதுகுத்தண்டில் உள்ள 5 முதுகெலும்புடன் இணைக்கப்பட்ட வால் வெளியே வந்தது கண்டறியப்பட்டது.

மருத்துவ அறுவை சிகிச்சை குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் வாலை வெட்டி எடுத்தனர்.

வால், நரம்பு மண்ட லத்துடன் இணைக்கப்பட்டு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வது சிக்கலாக இருந்ததாக கூறினர்.

இதுபோன்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு நரம்பியல் பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த குழந்தை எந்தவித பிரச்சினையும் இன்றி ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News