இந்தியா
null

மோடியை கணிதப் பேராசிரியராக நியமிக்க வேண்டும்- காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கிண்டல்

Published On 2024-05-02 09:40 GMT   |   Update On 2024-05-02 10:04 GMT
  • காங்கிரஸ் கட்சி இதுவரை 326 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது
  • காங்கிரஸ் 272 இடங்களில் கூட போட்டியிடவில்லை என்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்று பிரதமர் கூறுகிறார்

அண்மையில் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி,"இந்தியாவில் ஆட்சி அமைக்க விரும்பினால், குறைந்தது 272 இடங்கள் தேவை. பாஜகவைத் தவிர, நாட்டில் வேறு எந்த அரசியல் கட்சியும் 272 இடங்களில் போட்டியிடவில்லை, பின்னர் அவர்கள் (காங்கிரஸ்) எப்படி ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறார்கள்" என்று பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

"காங்கிரஸ் கட்சி இதுவரை 326 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் 272 இடங்களில் கூட போட்டியிடவில்லை என்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்று பிரதமர் கூறுகிறார்.

மோடி அவர்களே... உங்களது கணித திறமை அபாரமானது. நீங்கள் முழு கணிதவியல் பாடத்திற்கான டிகிரி வைத்திருக்கிறீர்களா. உத்தரபிரதேசத்தில் உள்ள கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியராக உங்களை அடுத்த மாதமே நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News