மட்டன்-சிக்கன், இந்து முஸ்லிம் என பேசுவதை மோடி நிறுத்த வேண்டும் - கார்கே
- நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளர்களை சாதித்து கார்கே உரையாடினார்.
நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிப் பேசி வருவதால் அரசியல் களம் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரதமர் மோடி உடன்பட பல பாஜக தலைவர்கள் வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையம் இதுகுறித்து பாராமுகம் காட்டுவதாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மோடி பிரச்சாரங்களில் பேசி வருவது குறித்து விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளர்களை சாதித்து கார்கே உரையாடினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி, இந்து- முஸ்லிம், மட்டன்- சிக்கன் என பிரச்சாரத்தில் பேசுவதை விட்டுவிட்டு நாட்டில் உள்ள மக்கள் பிரச்சனயை பற்றி பேச வேண்டும்.
அவரது பிரச்சாரத்தில், மட்டன், மாட்டிறைச்சி,சிக்கன், மீன், பெண்களின் தாலி உள்ளிட்ட வார்த்தைகளையே கேட்க முடிகிறது. அவர் மக்களிடம் இந்து- முஸ்லிம் விளையாட்டை விளையாடுவதை விட்டுவிட்டு நாட்டுக்கு பாஜக செய்த்வற்றைப் பற்றி பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், நாட்டில் நடந்து முடித்த 4 கட்ட வாக்குப்பதிவைப் பார்க்கும்போது இந்தியா கூட்டணி வலிமையுடன் இருப்பதாக தெரிவித்தார்.