இந்தியா
தெலுங்கானாவில் தலைகீழாக பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி: பா.ஜ.க. பரபரப்பு புகார்
- தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி.
- அவமாறியதை செய்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம்,சித்தி பேட்டை மாவட்டம், கஜ்வேல் நகராட்சியில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தது. நகராட்சி அலுவலகம் முழுவதும் வண்ண வண்ண தோரணங்கள் மற்றும் தேசிய கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. பின்னர் நகர மன்ற தலைவர் ராஜமவுலி குப்தா தேசிய கொடியை ஏற்றினார்.
அப்போது தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கண்ட அதிகாரிகள் நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேசியக்கொடி கீழே இறக்கப்பட்டு மீண்டும் சரி செய்து பறக்க விடப்பட்டது.
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றி அவமாறியதை செய்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க சார்பில் கஜ்வேல் போலீசில் புகார் செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.