null
பேடிஎம் ஃபாஸ்டேக் வைத்திருப்போர் வேறு வங்கிக்கு மாற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வலியுறுத்தல்
- நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர்
- தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஃபாஸ்டேக்குகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது
நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பேடிஎம் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்கள் மார்ச் 15ம் தேதிக்குள் வேறு வங்கிக்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு, அதன் பயனர்கள் தங்கள் பேடிஎம் ஃபாஸ்டேக் பேலன்ஸ்களை ரீசார்ஜ் செய்யவோ அல்லது டாப்-அப் செய்யவோ முடியாது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தொந்தரவின்றி பயணம் செய்வதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஃபாஸ்டேக்குகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி லிமிடெட், பந்தன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி , மற்றும் யெஸ் வங்கி போன்ற 39 நிறுவனங்கள் உள்ளன.