இந்தியா

எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல்- துணை ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது

Published On 2023-04-07 19:14 GMT   |   Update On 2023-04-07 19:14 GMT
  • சர்வதேச சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு 70 கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.
  • கடந்த மூன்று மாதங்களில் பாதுகாப்புப் படையினர் கைது செய்யப்பட்ட மூன்றாவது போதைப்பொருள் கடத்தல் வழக்கு இதுவாகும்.

ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நடத்திய தேடுதல் வேட்டையில், ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பாக்கில் 11 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் ரூ.11 லட்சத்துக்கும் மேல் பணத்தை போலீசார் கைப்பற்றியதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு 70 கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் நடத்திய விசாரணையில், சிஆர்பிஎஃப் வீரர் சஜாத் பதானா பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது.

குற்றம்சாட்டப்பட்ட மூவரும் குப்வாரா மாவட்டத்தின் கர்னாவில் உள்ள எல்லைப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீநகரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் பல்வால் கூறுகையில், "நாங்கள் சிஆர்பிஎஃப் வீரர் உள்பட 3 பேரை கைது செய்தோம். ஆரம்பத்தில், அவர் தனது அடையாளத்தை வெளியிடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் ஜம்மு பிராந்தியத்தில் பணியமர்த்தப்பட்ட ஒரு சிஆர்பிஃஎப் வீரர் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். கடந்த மூன்று மாதங்களில் பாதுகாப்புப் படையினர் கைது செய்யப்பட்ட மூன்றாவது போதைப்பொருள் கடத்தல் வழக்கு இதுவாகும்" என்றார்.

Tags:    

Similar News