இந்தியா

பிரதமர் மோடி

உயிரி பொருளாதாரம் 8 மடங்கு வளர்ச்சி- பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2022-06-09 08:20 GMT   |   Update On 2022-06-09 12:23 GMT
  • இந்த கண்காட்சி தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோரை இணைக்கும் வகையில் நடைபெற உள்ளது.
  • இந்த கண்காட்சியில் 300க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

புது டெல்லி:

டெல்லியில் இன்று மற்றும் நாளை (ஜூன் 9 மற்றும் ஜூன் 10) ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று காலை தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் 300க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சி தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோரை இணைக்கும் வகையில் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தபின் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் உயிரி பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. பயோடெக் உலகளாவிய உயிரிதொழில் நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பில் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைவது வெகு தொலைவில் இல்லை என பெருமிதத்துடன் கூறினார்.

Tags:    

Similar News