இந்தியா

விண்வெளிக்கு பயணிக்கும் பிரதமர் மோடி?.. 'நாடே பெருமைப்படும்!' - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Published On 2024-07-02 08:13 GMT   |   Update On 2024-07-02 08:13 GMT
  • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டடத்துக்கு தயாராகி வருகிறது.
  • பிரதமர் நரேந்திர மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

விண்வெளித்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அடுத்தாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டடத்துக்கு தயாராகி வருகிறது. ககன்யான் திட்டத்தின்கீழ் அடுத்த வருட இறுதியில் முதல் சோதனை பயணம் நடப்பட்ட உள்ளது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திட்டம் குறித்த சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

 

இந்தியாவில் பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்கள் குறைவு என்பதால் முதலில் விண்வெளிக்கு யாரை அனுப்புவது என்ற சிக்கல் உள்ளது. முதல் முறையாக செய்யப்படும் சோதனை பயணம் என்பதால் வெறும் ஆர்வம் மட்டுமே உள்ளவர்களை விஐபிகளை விண்வெளிக்கு அனுப்ப முடியாது. முழுவதுமாக பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே விஐபிகளை விண்வெளிக்கு அனுப்ப முடியும். எனவே இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்று சோம்நாத் தெரிவித்தார்.

 

அப்போது அவரிடம், பிரதமர் நரேந்திர மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவதில் நான் மட்டும் அல்ல இந்திய நாடே பெருமை கொள்ளும். அது மிகவும் சிறந்த தருணமாக இருக்கும். ஆனால் முழுமையாகி பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்ட பிறகே பிரதமர் போன்ற முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்று தெரிவித்தார்.

 

இதற்கிடையில் அடுத்த வருடம் இறுதியில் நடக்கும் முதல் ககன்யான் சோதனை பயணத்தை மேற்கொள்ள பிரஷாந்த் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்சு சுக்லா ஆகிய விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தத்க்கது.

Tags:    

Similar News