தலைமை நீதிபதி இல்லத்தில் பிரதமர் மோடி.. மன்மோகன் சிங் படத்தை பதிவிட்டு பாஜக கேள்வி
- பிரதமர் மோடியை குறிவைத்து எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக பாஜக குற்றச்சாட்டு.
- இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி. பாலிகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கணபதி பூஜை நடத்தினார். இந்த பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார். தலைமை நீதிபதி இல்ல பூஜையில், பிரதமர் மோடி கலந்து கொண்டு எதிர்கட்சிகளை கேள்வி எழுப்ப செய்தது.
இந்த விவகாரத்தில் எதிர்கட்சியினர் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களையும், ஏராளமான கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டில் நடந்த கணபதி பூஜையில் கலந்து கொண்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் இப்தார் விருந்து அளித்த போது எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தனது இல்லத்தில் நடத்திய இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி. பாலிகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் ஷெஹ்சாத் பூனவாலா, "2009- பிரதமர் மன்மோகன் சிங்கின் இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். தற்போதைய தலைமை நீதிபதி இல்லத்தில் விநாயகர் பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் - கடவுளே நீதித்துறை சமரசம் செய்யப்பட்டது," என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் 2009 ஆம் ஆண்டு இப்தார் விருந்து வழங்கியது போன்ற பழைய படத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா பகிர்ந்துள்ளார். இதில் அப்போதைய இந்திய தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.
இதோடு மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பல பிரமுகர்களை வரவேற்பதைக் காட்டும் இந்தியா டுடே ஆவணக் காப்பகங்களில் இருந்து பல புகைப்படங்களைப் ஷெஹ்சாத் பூனவல்லா பகிர்ந்துள்ளார்.