குவாட் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல-பிரதமர் மோடி
- குவாட் அமைப்பின் 4-வது உச்சிமாநாடு, வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.
- மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு நேற்று சென்றார். பிலடெல்பியா விமான நிலையத்தை சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெலவர் மாகாணம் வில்மிங்டன் நகரில் நடை பெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, அமெரிக்க அதிபர் ஜோபைடன் உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம் என்றார்.
இதையடுத்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் 4-வது உச்சிமாநாடு, வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா. ஆஸ்தி ரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
அவர்கள் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, வளா்ச்சி, ஸ்திரத்தன்மை, உக்ரைன் மற்றும் காசா போர் பிரச்சனைக்கு அமைதித் தீா்வைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்தனர்.
மேலும், சுகாதாரம் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், வளரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, போக்கு வரத்து தொடா்புகள், பயங்கரவாத எதிா்ப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப் படுத்துவது குறித்தும் விவா தித்தனர்.
பதற்றமும் பல்வேறு விதமான பிரச்சினைகளும் உலகை சூழ்ந்திருக்கும் நேரத்தில் குவாட் உச்சி மாநாடு நடக்கிறது. ஜன நாயக அடிப்படையில் குவாட் உறுப்பு நாடுகள் செயல்படுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தோ-பசிபிக் பெருங்கடல் உள்ளடக்கிய பகுதிகளில் குவாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்பட வேண்டியது முக்கியம். பயங்கரவாத செயல்களுக்கு எதிராக குவாட் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. நாம் அனைவரும் விதிகள் அடிப் படையிலான சர்வதேச ஒழுங்கு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒரு மைப்பாட்டிற்கான மரியாதை மற்றும் அனைத்து சர்ச்சைகளுக்கும் அமைதியான தீர்வு ஆகியவற்றை ஆதரிக்கிறோம்.
சுதந்திரம், திறந்த, உள்ளடக்கிய மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் நமது முன்னுரிமை என்றார். பின்னர் ஜோபைடன், புமியோ கிஷிடா. அந்தோணி அல்பானீஸ் ஆகியோருடன் பிரதமர் மோடி தனித்தனியாக இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில் வர்த்தகம், பாது காப்பு, விண்வெளி மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் என்று ஜோபைடன் தெரிவித்தார்.
குவாட் மாநாடு முடிந்த பிறகு பிரதமர் மோடி நியூயார்க்குக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மோடி, நியூயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் ஐ.நா.வின் எதிர்காலத் துக்கான உச்சி மாநாட்டில் மோடி உரையாற்றுகிறார்.