இந்தியா

ஐந்து நாள் ஓய்விற்குப் பிறகு இன்று நடை பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி

Published On 2024-03-02 04:31 GMT   |   Update On 2024-03-02 04:31 GMT
  • ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடை பயணம் மேற்கொள்கிறார்.
  • இன்று முதல் 6-ந்தேதி வரை மத்திய பிரதேசத்தில் நடை பயணம் மேற்கொள்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

மணிப்பூர், அசாம், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் நடை பயணத்தை முடித்துள்ளார். அதேவேளையில் கடந்த ஐந்து நாட்கள் நடை பயணம் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் ஐந்து நாட்கள் ஓய்விற்குப் பிறகு இன்று ராகுல் காந்தி நடை பயணத்தை மீண்டும் தொடங்குகிறார் என காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொது செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், "ஐந்து நாட்களுக்குப் பிறகு ராகுல் காந்தி இன்று மதியம் 2 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் இருந்து நடை பயணத்தை தொடங்குகிறார். மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவிற்குள் மதியம் 3 மணியளவில் நாங்கள் நுழைவோம். மத்திய பிரதேச மாநிலத்தில் மார்ச் 6-ந்தேதி வரை நடை பயணம் தொடரும்.

மார்ச் 5-ந்தேதி பிரசித்தி பெற்ற மஹாகாலேஷ்வர் கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். மார்ச் 7-ந்தேதி நடை பயணம் குஜராத் மாநிலத்திற்குள் நுழையும். நடை பயணத்தின்போது மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்" என்றார்.

பா.ஜனதா ஆளும் அசாம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ராகுல் காந்தி நடை பயணத்திற்கு இடையூறு அளிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது குற்றிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் பா.ஜனதா ஆளும் மாநிலங்களாகும்.

Tags:    

Similar News