இந்தியா

ரேசன் பொருட்களை பெற்றோருக்கு வழங்க கூறிய கணவர்: 2 குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு

Published On 2024-06-12 18:38 IST   |   Update On 2024-06-12 18:38:00 IST
  • கணவர் ரேசன் பொருட்களை பெற்றோருக்கு வழங்க விரும்பியுள்ளார்.
  • இது தொடர்பாக மனைவியிடம் கூறும்போது இவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் ஷாகூர் கான் தனது மனைவி ரஹ்மத் (28), மகள் மர்யம் (8), மகன் யாசின் (5) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த குடும்பத்தினருக்கு ரேசன் கடையில் இலவசமாக பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த இலவச பொருட்களை தனது பெற்றோருக்கு வழங்க ஷாகூர் கான் விரும்பினார். இது தொடர்பானக தனது விருப்பத்தை மனைவி ரஹ்மத்திடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் மனைவி ரஹ்மத் தனது மாமனார் மற்றும் அத்தைக்கு ரேசன் இலவசங்களை வழங்க விருப்பம் இல்லை என தனது கணவருடன் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதனால் ரஹ்மத் தனது கணவர் மீது கோபம் அடைந்து இரண்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி தொட்டிக்குள் குதித்துள்ளார். இதில் தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக தகவல்அறிந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கான மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் ரஹ்மத்தின் கணவர் ஷாகூர், ஷாகூர் தந்தை மற்றும் தாயார், மேலும் இருவர் என ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News