சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ள ஜெயில் முன்பு ராம் கோபால் வர்மா செல்பி-பரபரப்பு
- திடீரென சாலையோரம் காரை நிறுத்திய ராம் கோபால் வர்மா ஜெயில் வாசல் முன்பாக நின்று தனது செல்போனில் செல்பி எடுத்தார்.
- ஜெயில் முன்பாக தான் எடுத்த செல்பி போட்டோவை எக்ஸ் தளத்தில் ராம் கோபால் வர்மா பதிவிட்டார்.
திருப்பதி:
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாடு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ராம்கோபால் வர்மா நேற்று காலை ராஜமுந்திரி ஜெயில் முன்பாக காரில் சென்று கொண்டு இருந்தார்.
திடீரென சாலையோரம் காரை நிறுத்திய ராம் கோபால் வர்மா ஜெயில் வாசல் முன்பாக நின்று தனது செல்போனில் செல்பி எடுத்தார்.
பின்னர் ஜெயில் முன்பாக தான் எடுத்த செல்பி போட்டோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். படத்திற்கு கீழே இல்லை@ஒய்.எஸ். ஜெகன் உள்ளே இல்லை என பதிவு செய்து இருந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
ஜெயில் வாயில் முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ராம் கோபால் வர்மா ஜெயில் வாயில் அருகே செல்லாமல் மெயின் ரோட்டில் இருந்து செல்பி எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததாக தெரிவித்தனர்.
சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பாக அவர் செல்பி எடுத்ததால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.