இந்தியா (National)

`ஜெய ஜெய ஹே தெலுங்கானா' மாநில பாடலாக அங்கீகாரம்: சின்னத்தை மாற்றி அமைப்பதில் சிக்கல்

Published On 2024-05-31 05:04 GMT   |   Update On 2024-05-31 05:04 GMT
  • தெலுங்கானா சின்னம் மாற்றி அமைப்பதில் அரசுக்கு சிக்கல்.
  • தெலுங்கானா அன்னை உருவம் மாற்றி அமைக்கப்படும்.

திருப்பதி:

தெலுங்கானா மாநில 10-ம் ஆண்டு விழா வருகிற 2-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

புதிதாக ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநிலத்திற்கு தனியாக மாநில பாடல் உருவாக்கப்படும்.

மாநில சின்னம், தெலுங்கானா அன்னை உருவம் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இசையமைப்பாளர் கீரவாணி இசையில் ஜெய ஜெய ஹே தெலுங்கானா என்ற பாடல் தயாரானது. இந்த பாடல் மாநில பாடலாக அங்கீகரிக்கப்பட்டது.

பாடலை தேர்வு செய்யும் கூட்டத்தில் பா.ஜ.க. மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.

புதிதாக தயாராகும் தெலுங்கானா மாநில சின்னத்தில் சார்மினார் மற்றும் காகதியா வளைவு அகற்ற முடிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தெலுங்கானா சின்னம் மாற்றி அமைப்பதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. மேலும் தெலுங்கானா அன்னை சிலையை மாற்றியமைப்பது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

அனைத்து பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும்படி அரசு சின்னம் மற்றும் தெலுங்கானா அன்னை சிலை இருக்கும் வகையில் அரசு முடிவு எடுக்கும் என முதல் மந்திரி ரேவேந்த் ரெட்டி உறுதி அளித்துள்ளார். 

Tags:    

Similar News