இன்று ரேவண்ணா ஜாமீன் மனு விசாரணை: ஆபாச வீடியோக்களை அழிக்க எஸ்.ஐ.டி. குழு உத்தரவு
- இன்று எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது.
- தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு.
பெங்களூரு:
பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோவில் இருந்த மைசூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தியதாக எச்.டி. ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஷ் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரேவண்ணாவை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா சார்பில் அவரது வக்கீல் பவன்சாகர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் விசாரணை நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி விசாரணையை இன்று ஒத்திவைத்தார். எனவே இன்று எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது.
பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோ தொடர்பான வழக்கை விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் ஆபாசமான வீடியோக்கள், புடைப்படங்களை பகிர்வது மட்டுமல்ல, அவற்றை வைத்திருப்பதும் குற்றம். தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
எனவே ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்தி ருந்தால் கண்டுபிடிப்பது எளிது. எனவே இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் புடைப்படங்களை யாராவது வைத்திருந்தால், அவற்றை அழித்து விடுவதன் மூலம் சட்ட நடவடிக்கைகளில் இருந்த தப்பிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.