இந்தியா
கொச்சி விமான நிலையத்தில் பொம்மைகளுக்குள் மறைத்து கடத்திய ரூ.19 லட்சம் தங்கம் சிக்கியது
- அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது
- விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனைத்தொடர்ந்து அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மூலம் அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்த மொய்தீன் என்பவரது நடத்தை சந்தேகப்படும் வகையில் இருந்தது. அவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனைத்தொடர்ந்து அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.
சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள், கார்கள் போன்றவற்றை அவர் வைத்திருந்தார். அவற்றை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியதில், சுருள் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. ரூ.18.79 லட்சம் மதிப்பிலான 352.40 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.