இந்தியா

கடந்த 64 ஆண்டுகளை விட அதிகம்.. லாபத்தை வாரி குவித்த எஸ்பிஐ..!

Published On 2024-08-04 06:16 GMT   |   Update On 2024-08-04 06:16 GMT
  • கடந்த நான்கு ஆண்டு கால வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது.
  • கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்து ரூ. 30 லட்சமாக உயர்ந்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைவர் தினேஷ் குமார் கரா தனது தலைமையின் கீழ் எஸ்பிஐ வங்கி நிகர லாபம் பலமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருப்பதாக தெரிவித்தார். கடந்த 64 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த நான்கு ஆண்டு கால வளர்ச்சி அதிகரித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நாடு முழுக்க 22 ஆயிரம் கிளைகள் மற்றும் ரிசர்வுகள், சேவைகள் பிரிவில் மிக உறுதியாக இருக்கும் போதிலும் எஸ்பிஐ வங்கிக்கு சரியான மதிப்பு கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

"கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் நிகர லாபம் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரம் கோடி ஆகும். அதற்கு முந்தைய 64 ஆண்டுகளில் எஸ்பிஐ நிகர லாபம் 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் தான்," என்று கரா தெரிவித்தார். இந்த மாதத்துடன் எஸ்பிஐ தலைவர் பதவியில் இருந்து விலகும் கரா காலாண்டு முடிவுகள் வெளியான பிறகு இவ்வாறு தெரிவித்தார்.

இவர் தலைவராக பொறுப்பேற்ற காலத்தில் ஆண்டு லாபம் ரூ. 14 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது இது ஒரு காலாண்டிற்கு ரூ. 17 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதேபோன்று ஒரு ஊழியரால் ஏற்படும் வளர்ச்சி கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்து ரூ. 30 லட்சமாக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News