இந்தியா

ஞானவாபி மசூதியில் தடயவியல் சோதனையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

Published On 2023-05-19 11:02 GMT   |   Update On 2023-05-19 11:02 GMT
  • இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது.
  • ஞானவாபி மசூதியில் தடயவியல் சோதனை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இங்கு இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்துமத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மசூதியில் லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்க தடயவியல் சோதனைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு அனுமதி அளித்திருந்தது. இதற்கிடையில் ஞானவாபி மசூதியை மேற்பார்வை செய்துவந்த இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், இஸ்லாமிய அமைப்புகளின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஞானவாபி மசூதியில் தடயவியல் சோதனையை ஒத்தி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News