இந்தியா
தெலுங்கானாவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த காங்கிரஸ் அரசு தயக்கம்
- பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
- ஊரக பகுதிகளுக்கு தனி அலுவலர்களை அரசு நியமனம் செய்துள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
அதேபோல மண்டல வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஜில்லா அளவிலான வார்டு உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் கடந்த 3-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால் தெலுங்கானாவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மொத்தமுள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதை பின்னடைவாக காங்கிரஸ் அரசு பார்க்கிறது.
இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த காங்கிரஸ் தயக்கம் காட்டி வருகிறது. ஊரக பகுதிகளுக்கு தனி அலுவலர்களை அரசு நியமனம் செய்துள்ளது.