சோயிப் அக்தருடன் எடுத்த 'செல்பி' புகைப்படத்தை பகிர்ந்த சசிதரூர்
- இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து நல்லதோர் உரையாடல் மேற்கொண்டோம் என கூறியிருந்தார்.
- பதிவை பார்த்த நெட்டிசன் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். உலகில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிடுவார்.
இந்நிலையில் சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருடன் 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொண்டதை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பான அவரது பதிவில், துபாய் வழியாக டெல்லிக்கு திரும்பினேன். அப்போது ஆச்சரியம் அளிக்கும் வகையில் சோயிப் அக்தர் என்னை சந்தித்து 'ஹலோ' என்று கூறியதும் ஆனந்தமும், ஆச்சரியமும் அடைந்தேன். வேகப்பந்து வீச்சில் ஸ்மார்ட்டான, அதே நேரத்தில் ஊக்கமளிக்கும் மனிதர் அவர். அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். என்னை வாழ்த்த வந்த இந்தியர்கள் அனைவரும் அவருடன் செல்பி புகைப்படம் எடுக்க விரும்பினர். இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து நல்லதோர் உரையாடல் மேற்கொண்டோம் என கூறியிருந்தார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அதில் சிலர், சோயிப் அக்தர் மற்றும் சசிதரூர் ஆகியோரை பார்க்க ஒன்றுபோல் இருப்பதாகவும், இருவரின் முகம், ஹேர்ஸ்டைல் உள்ளிட்டவை ஒன்று போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.