ரெயில் விபத்து செய்தியில் மோடி படம் இருக்க கூடாதா? - காங்கிரஸ் தலைவர் கிண்டல்
- மேற்குவங்க ரெயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது
- உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் இன்று காலை வெளியானது. இதில் முதலில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்குவங்க ரெயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரெயில் விபத்தை காண செல்வது பற்றிய ANI செய்தியில் மோடியின் புகைப்படம் பின்னணியில் இருந்தது. பின்னர் அந்த புகைப்படத்தை ANI மாற்றியுள்ளது.
இதனை கிண்டல் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் பவன் கெரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ரெயில் விபத்து செய்தியில் 'முதலாளி'யின் படத்தை காட்டக் கூடாது. கூடாது என்றால் கூடாதுதான்" என்று பதிவிட்டுள்ளார்.