இந்தியா

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 70 பேரை கடித்த பாம்புகள்

Published On 2024-09-12 04:43 GMT   |   Update On 2024-09-12 04:43 GMT
  • விஜயவாடாவில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு மழை வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது.
  • ஜெர்ரி போட்டு வகையை சார்ந்த பழுப்பு மற்றும் தங்க நிறத்திலான பாம்புகள் அதிக அளவில் காணப்படுகிறது.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவு மழை கொட்டி தீர்த்தது. இதனால் விஜயவாடா, கர்னூல், கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் மழை வெள்ளம் ஊர்களுக்குள் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது. விஜயவாடாவில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு மழை வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது.

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மரங்கள், புதர்கள் மற்றும் புற்றுகளில் இருந்த பாம்புகள் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்தனர். விஜயவாடாவில் மட்டும் 70 பேரை பாம்புகள் கடித்தன. பாம்பு கடிபட்டவர்கள் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் கிருஷ்ணா மாவட்டம், அவனி பட்டாவில் ஜெர்ரி போட்டு வகையை சார்ந்த பழுப்பு மற்றும் தங்க நிறத்திலான பாம்புகள் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த வகையான பாம்புகள் விஷத்தன்மை இல்லாதவை என்பதால் பாம்பு கடிபட்டவர்களுக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

Tags:    

Similar News