இந்தியா

மகள்களை கணவர்களின் வீட்டிற்கு அனுப்ப மறுப்பு- மருமகன்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

Published On 2024-08-04 04:28 GMT   |   Update On 2024-08-04 04:28 GMT
  • கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மகள்கள் 2 பேரும் தங்களது பெற்றோர் வீட்டிற்கு வந்தனர்.
  • குஜராத் மாப்பிள்ளையும், விஜயவாடா மாப்பிள்ளையும் நேற்று ஏலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், ஏலூரை சேர்ந்தவர் சீனிவாச ராமானுஜ ஐயங்கார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கும், இளைய மகளை விஜயவாடாவை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்து கொடுத்தார். 2 மகள்களுக்கும் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மகள்கள் 2 பேரும் தங்களது பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். பின்னர் மருமகன்களின் நடத்தை சரியில்லை என 2 மகள்களையும் அவர்களது கணவர்களின் வீட்டிற்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தார்.

மருமகன்கள் 2 பேரும் மனைவிகளை குடும்பம் நடத்த அனுப்ப வேண்டுமென பலமுறை மாமனாரிடம் கெஞ்சி பார்த்தனர். இருப்பினும் மகள்களை அனுப்ப முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனால் மருமகன்கள் 2 பேரும் நூதன முறையில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். குஜராத் மாப்பிள்ளையும், விஜயவாடா மாப்பிள்ளையும் நேற்று ஏலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து மனைவிமார்களை சேர்த்து வைக்க வேண்டும் என கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் இவர்களின் போராட்டத்தை வேடிக்கையாக பார்த்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News