இந்தியா

சிபிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு தேர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் தென் இந்திய மாநிலங்கள்- உத்தரபிரதேசம் கடைசி இடம்

Published On 2024-05-13 09:49 GMT   |   Update On 2024-05-13 09:49 GMT
  • நாடுமுழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • நாடுமுழுவதும் தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுடெல்லி:

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

நாடுமுழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில், மண்டல வாரியாக 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.04 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் 2-ம் இடத்திலும், 98.47 சதவீதத்துடன் சென்னை 3-ம் இடத்திலும், 96.95 சதவீதத்துடன் பெங்களூரு 4-ம் இடமும் பிடித்துள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்ச்சியில் முதல் 4 இடங்களையும் தென் இந்திய மாநிலங்களே பெற்றுள்ளது.

உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (78.25%) , நொய்டா (80.27%) மண்டலங்கள் கடைசி இடங்களையே பிடித்துள்ளது.

நாடுமுழுவதும் தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில், மண்டல வாரியாக, 99.75 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.60 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் 2-ம் இடத்திலும், 99.30 சதவீதத்துடன் சென்னை 3-ம் இடத்திலும், 99.26 சதவீதத்துடன் பெங்களூரு 4-ம் இடமும் பிடித்துள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்ச்சியிலும் முதல் 4 இடங்களை தென் இந்திய மாநிலங்களே பெற்றுள்ளது.

அசாம் மாநிலத்தின் கவுகாத்தி ( 77.94%) , உத்தரபிரதேசத்தில் நொய்டா (90.46%) மண்டலங்கள் கடைசி இடங்களை பிடித்துள்ளது.

Tags:    

Similar News