இந்தியா
மோடி சீனாவை எதிர்க்காதது ஏன்?- தேர்தலுக்கு பின் உண்மையை கூறுவேன்: சுப்ரமணிய சாமி
- இந்திய பகுதிகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
- சீன ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை.
புதுடெல்லி:
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்ரமணிய சாமி தனியார் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
இந்திய பகுதிகளைத் தொடர்ந்து சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சீன ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை.
இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனப்படைகளை ஏற்கனவே நாம் இரு முறை விரட்டியுள்ளோம்.
நம்மிடம் உள்ள ராணுவ வலிமையால் சீனா ஆக்கிரமித்த பகுதிகளை எளிதில் கைப்பற்றிவிடலாம். ஆனால் பிரதமர் மோடி அதை செய்வதில்லை. காரணம் என்னவென்றால் பிரதமர் மோடியை சீனா பிளாக்மெயில் செய்து வருகிறது.
சீனா பிரதமர் மோடியை பிளாக்மெயில் செய்வதற்கான காரணத்தை தேர்தலுக்குப் பிறகு வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.
மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வரக்கூடாது என கடந்த மாதம் கருத்து தெரிவித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.