இந்தியா

உ.பி. அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2024-11-08 07:32 GMT   |   Update On 2024-11-08 07:32 GMT
  • அலிகர் பல்கலைக்கழகத்துக்கான சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது.
  • நிறுவனம் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுகிறதா என்பதுதான் முக்கியம்

உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மையினர் அந்தஸ்து தொடர்பான வழக்கில் பல ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பளித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அலிகர் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமாக இருந்தது கிடையாது என்று தெரிவித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பின் அமர்வு விசாரணை செய்து வந்தது.

சுமார் 18 ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. அதில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை சிறுபான்மை நிறுவனமாக இருக்க முடியாது என்ற அலகாபாத் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்கிறது. இதில் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

அலிகர் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது. நிறுவனம் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுகிறதா என்பதுதான் முக்கியம் என்று தெரிவித்தனர். அதேவேளையில் நீதிபதிகள் சூர்ய காந்த், திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

இதுகுறித்து தலைமை நீதிபதி கூறும்போது, இவ்வழக்கில் 4 தனித்தனி தீர்ப்புகள் உள்ளன. 3 மாறுபட்ட தீர்ப்புகள் உள்ளன. நான் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் பெரும்பான்மை தீர்ப்பை கொடுத்துள்ளோம். பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பான விவகாரம் சுப்ரீம் கோர்ட்டால் நிர்ணயிக்கப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். அதன்படி நிறுவனத்துக்கு அந்தஸ்து வழங்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய மற்றொரு அமர்வுக்கு அனுப்புகிறோம்.

அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பின் செல்லுபடியை தீர்மானிக்க புதிய அமர்வு அமைப்பதற்கு வழக்கின் நீதித்துறை பதிவுகளை தலைமை நீதிபதி முன் வைக்க வேண்டும் மெஜாரிட்டி நீதிபகள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News