null
'தி கேரளா ஸ்டோரி' திரையிடப்பட்ட அரங்கில் சர்ச்சை கருத்து தெரிவித்த பெண் சாமியார் மீது வழக்கு
- கேரளாவில் இந்து, கிறிஸ்தவ பெண்களை மதம் மாற்றி ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.
- இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
கேரளாவில் இந்து, கிறிஸ்தவ பெண்களை மதம் மாற்றி ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது, என்றாலும் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சாத்வி பிராச்சி
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பெண் சாமியார் சாத்வி பிராச்சி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஜெய்பூரில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியான தியேட்டரில் நின்றபடி பெண் சாமியார் சாத்வி பிராச்சி,மாற்று மதம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார். இதனை வீடியோவில் பதிவு செய்த சிலர் அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். அதன்பேரில் ஜெய்பூர் போலீசார், பெண் சாமியார் சாத்வி பிராச்சி மீது சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டதாக வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.