இந்தியா

திரிபுரா மாநில சட்டசபை தேர்தல்- காலை 9 மணி நிலவரப்படி 13.23% வாக்குகள் பதிவு

Published On 2023-02-16 05:40 GMT   |   Update On 2023-02-16 05:40 GMT
  • விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தலில், மக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.
  • தேர்தலுக்காக 25 ஆயிரம் மத்திய படையினருடன், 31 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக இன்று, திரிபுரா மாநிலம், தேர்தலை சந்திக்கிறது.

60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தலில், மக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு தேர்தலுக்காக 25 ஆயிரம் மத்திய படையினருடன், 31 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News