பீகாரில் கங்கை நதியில் குடும்பத்தினருடன் ஆற்றில் குளித்த சிறுவனை கடித்து கொன்ற முதலை
- ஒரு முதலை அங்கித்தை கடித்து இழுத்து சென்று கொன்றது.
- சிறிது நேரத்திற்கு பிறகு அங்கித்தின் உடலை வெளியே எடுத்தோம்.
பாட்னா:
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் தியாரா பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர் அங்கித்குமார்.
இவரது குடும்பத்தினர் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளனர். அந்த மோட்டார் சைக்கிளுக்கு கங்கா நதிநீர் மூலம் பூஜை செய்வதற்காகவும், கங்கை நதியில் நீராடவும் அவர்கள் ஆற்றுக்கு சென்றுள்ளனர்.
அங்கு ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது முதலை ஒன்று மாணவர் அங்கித் மீது பாய்ந்து அவரை தாக்கி கடலுக்குள் இழுத்து சென்று கடித்து உயிரோடு சாப்பிட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கடற்கரையையொட்டி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மாணவர் அங்கித்தின் உடல் கரை ஒதுங்கியது.
உடலை பார்த்து அங்கித்தின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் முதலை மீது ஆத்திரம் கொண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து கடலில் சுற்றிய முதலையை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அதனை கம்பு மற்றும் குச்சிகளால் சரமாரியாக அடித்து தாக்கினர். இதில் முதலை இறந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சம்பவம் குறித்து அங்கித்தின் தாத்தா சகல்தீப்தாஸ் கூறுகையில், நாங்கள் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி அதற்கு பூஜை செய்வதற்காக கங்கை நதிக்கு சென்றிருந்தோம். அப்போது ஒரு முதலை அங்கித்தை கடித்து இழுத்து சென்று கொன்றது. சிறிது நேரத்திற்கு பிறகு அங்கித்தின் உடலை வெளியே எடுத்தோம். ஒரு மணி நேரம் கழித்து முதலையையும் வெளியே இழுத்து அடித்து கொன்றோம் என்றார்.