இந்தியா
- மேகாலயாவில் உள்ள துரா என்ற நகரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு 29 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.
யூகா:
மேகாலயா மாநிலத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று காலை 6.57 மணிக்கு மேகாலயாவில் உள்ள துரா என்ற நகரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு 29 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.
முன்னதாக வடகிழக்கு பகுதியான மணிப்பூர் அருகே உள்ள நோனி பகுதியில் இன்று அதிகாலையில் 2.46 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 5 மணி நேரத்தில் வடகிழக்கு பகுதியில் பதிவான 2 நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் சற்று பீதியடைந்தனர்.