இந்தியா
குருவாயூர் கோவிலுக்கு வங்கியில் ரூ.1,737 கோடி பணம், 271 ஏக்கர் நிலம்- தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்தது
- குருவாயூர் கோவிலுக்கு ரூ.1,737 கோடிக்கு வங்கியில் டெபாசிட் உள்ளது. இது தவிர கோவிலுக்கு 271 ஏக்கர் நிலங்களும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
- கோவிலில் சாமிக்கு காணிக்கையாக கிடைத்த ஏராளமான தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த வைரக்கற்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் பல ஆயிரம் கோடி தங்க, வைர, வைடூரியங்கள் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்ற தகவலை குருவாயூரை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டிருந்தார்.
அதற்கு கோவில் நிர்வாகம் அளித்த தகவல் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி குருவாயூர் கோவிலுக்கு ரூ.1,737 கோடிக்கு வங்கியில் டெபாசிட் உள்ளது. இது தவிர கோவிலுக்கு 271 ஏக்கர் நிலங்களும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
கோவிலில் சாமிக்கு காணிக்கையாக கிடைத்த ஏராளமான தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த வைரக்கற்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.