இந்தியா

வெறிநாய் கடித்ததில் குதிரை பலி: சவாரி செய்த சுற்றுலா பயணிகள் மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுரை

Published On 2023-09-10 09:03 GMT   |   Update On 2023-09-10 09:03 GMT
  • ஓணம் பண்டிகையின் போது குதிரை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பயன்படுத்தப்பட்டது.
  • குதிரையை பரிசோதித்த போது தாமதமாக ரேபிஸ் அறிகுறிகள் காணப்பட்டன.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொயிலாண்டி அருகே உள்ள கப்பாட் கடற்கரைக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்களை மகிழ்விக்க அங்கு குதிரை சவாரி நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபடும் ஒரு குதிரையை கடந்த மாதம் 19-ந் தேதி வெறிநாய் கடித்தது.

இதனை தொடர்ந்து அந்த குதிரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டன. இதனால் குதிரை ஆரோக்கியமாக காணப்பட்டது. இதனால் ஓணம் பண்டிகையின் போது குதிரை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பயன்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அந்த குதிரைக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. குதிரையை பரிசோதித்த போது தாமதமாக ரேபிஸ் அறிகுறிகள் காணப்பட்டன. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் இன்று காலை குதிரை பரிதாபமாக இறந்தது.

இதனை தொடர்ந்து சமீப காலமாக குதிரையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குதிரை உரிமையாளர் மற்றும் சவாரி செய்த சுற்றுலா பயணிகள் தகுந்த பரிசோதனைகள் செய்து கொள்ளுமாறு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News