இந்தியா
மத்திய மந்திரியை அவமதித்தேனா?- டி.ஆர்.பாலு விளக்கம்
- தமிழ்நாட்டுக்கு வெள்ளநிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது.
- பட்டியிலன அமைச்சரை அவமதித்து விட்டதாக பாரதிய ஜனதாவினர் சித்தரித்து கேள்வி எழுப்புகிறார்கள்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளநிவாரணம் தொடர்பாக தி.மு.க கேள்வி எழுப்பிய போது தி.மு.கவுக்கும், பாரதிய ஜனதா எம்.பிக்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. டி.ஆர்.பாலு மத்திய மந்திரி எல்.முருகனை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக டி.ஆர். பாலு கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு வெள்ளநிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. புறக்கணிக்கிறது. நான் பேசிக்கொண்டு இருக்கும் போது மத்திய மந்திரி எல். முருகன் குறிக்கிட்டு பேசினார். இதனால் வெள்ள நிவாரணம் குறித்து தொடர்பு இல்லாத அமைச்சர் குறுக்கிட வேண்டாம் என்று தான் குறிப்பிட்டேன். ஆனால் பட்டியிலன அமைச்சரை அவமதித்து விட்டதாக பாரதிய ஜனதாவினர் சித்தரித்து கேள்வி எழுப்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.