இந்தியா
கேரளாவில் பாத யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி
- தமிழகத்தில் பயணத்தை நிறைவு செய்த நிலையில் இன்று கேரளாவில் தொடக்கம்.
- கேரளாவில் உள்ள செறுவாரகோணத்தில் ராகுல் காந்தி நடை பயணத்தை தொடங்கியுள்ளார்.
தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாதயாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 7-ந் தேதி தொடங்கினார். குமரி மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் செய்த அவர், தனது பயணத்தின் போது பல்வேறு அமைப்பினரை சந்தித்து பேசினார்.
தமிழ்நாட்டில் வித்தியாசமான செயல்கள் செய்த 12 ஊராட்சி மன்ற தலைவர்களையும் அவர் சந்தித்தார். நேற்றுடன் தமிழகத்தில் பாதயாத்திரை நிறைவு செய்ததை அடுத்து, இன்று கேரளாவில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
அதன்படி, கேரளாவில் உள்ள செறுவாரகோணத்தில் ராகுல் காந்தி நடை பயணத்தை தொடங்கியுள்ளார்.