தெலுங்கானா சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் பதுக்கிய ரூ.3.68 கோடி மது பறிமுதல்
- அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களை கவருவதற்காக அரசியல் கட்சியினர் பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானங்களை ஆங்காங்கே பதுக்கி வைத்துள்ளனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறக்கும் படைகள் அமைத்து வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் மது பாட்டில்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்த ரூ.3.68 கோடி மதிப்புள்ளான மது பாட்டில்கள் ரூ.3.17 கோடி ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தெலுங்கானாவில் போலீசார் நடத்திய சோதனையில் இதுவரை 347.16 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.