ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை- ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு
- நோட்டுப் புத்தகத்தில் எதற்காக செல்போன் பயன்படுத்துகிறோம். அத்தியாவசிய காரணம் என்ன என்பது குறித்து பதிவு செய்ய வேண்டும்.
- மாணவர்களுக்கு செல்போன் மூலம் ஆன்லைனில் ஒரு சில பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஆந்திராவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பணி செய்யும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்போன் பயன்படுத்த கூடாது.
காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை செல்போன்களை வகுப்பறைக்குள் கொண்டு வர க்கூடாது.
பணிக்கு வரும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் அங்குள்ள ஒரு அறையில் செல்போன்களை வைத்து விட்டு வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.
செல்போன் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தால் கல்லூரி முதல்வர் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும்.
அங்குள்ள நோட்டுப் புத்தகத்தில் எதற்காக செல்போன் பயன்படுத்துகிறோம். அத்தியாவசிய காரணம் என்ன என்பது குறித்து பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு முன் அனுமதிபெறாமல் முதல் முறையாக செல்போன் பயன்படுத்தினால் எச்சரிக்கை விடப்படும். தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவது தெரிய வந்தால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு ஆசிரியர்கள் பேராசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கு செல்போன் மூலம் ஆன்லைனில் ஒரு சில பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அரசின் இந்த முடிவால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களும் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.