இந்தியா

பாதாம், பிஸ்தா, முந்திரி சாப்பிடும் எருமை மாட்டின் விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2022-10-27 06:24 GMT   |   Update On 2022-10-27 06:24 GMT
  • ஐதராபாத்தில் உள்ள நகராட்சி மைதானத்தில் உழவர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
  • விழாவுக்கு ஏற்பாடு செய்து வரும் மதுயாதவ் என்பவர் எருமை மாடுகளை வாங்கி அவரது பால் பண்ணையில் வளர்த்து வருகிறார்.

ஐதராபாத்தில் ஆண்டுதோறும் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தீபாவளிக்கு மறுநாள் சதர் விழா நடத்துவது வழக்கம். இதில் பங்கேற்பதற்காக விலை உயர்ந்த எருமை மாடுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வருவார்கள். இந்த ஆண்டும் தீபாவளிக்கு மறுநாள் சதர்விழா நடத்தப்பட்டது.

ஐதராபாத்தில் உள்ள நகராட்சி மைதானத்தில் உழவர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்து வரும் மதுயாதவ் என்பவர் எருமை மாடுகளை வாங்கி அவரது பால் பண்ணையில் வளர்த்து வருகிறார். இதில் 'கருடன்' என்ற எருமை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் விலை ரூ.35 கோடி ஆகும். 20 நாட்களுக்கு முன்பு அரியானாவில் ஹைமத் ஆலம்கானிடம் இருந்து ரூ.35 கோடி கொடுத்து இந்த 4 வயதான கருடன் எருமையை வாங்கியுள்ளார். தற்போது அதை ஐதராபாத்துக்கு கொண்டு வந்துள்ளார். இதேபோல் அவரிடம் 10 எருமைகள் உள்ளன.

இந்த எருமைகளுக்கு பால், பிஸ்தா, பாதாம், முந்திரி, ஆப்பிள், கோழி முட்டை, கொண்டைகடலை, கடலை பருப்பு, வெந்தய விதைகள், வேர்க்கடலை, குஜார், பீட்ரூட் ஆகியவை உணவாகும்.

Tags:    

Similar News