இந்தியா
ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து- 16 வீரர்கள் உயிரிழப்பு
- கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- விபத்தில் காயம் அடைந்த 4 வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு என்ற இடத்திற்கு ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது, ஜீமா என்ற இடத்தில் வளைவில் திரும்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்களில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயம் அடைந்த 4 வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.